காதலனுடன் ஓடி போன மனைவி: 2 மாதம் கழித்து கண்டுபிடித்த கணவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
இந்தியாவில் கள்ளக்காதலனுடன் ஓடி போன மனைவி இரண்டு மாதங்களுக்கு பின்னர் கணவரால் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் பொதுவெளியில் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தின் ரடாடியா கிராமத்தை சேர்ந்தவர் பரத் மவி. இவரின் 30 வயது மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காதலனுடன் ஓடிபோயுள்ளார்

இந்நிலையில் பரத்தும் அவர் உறவினர்களும் பல இடங்களில் அவர் மனைவியை தேடிய நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அதே மாநிலத்தின் வரம்கேடா என்ற ஊரில் கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து அவரை தன்னுடைய கிராமத்துக்கு கணவர் அழைத்து வந்தார்.

பின்னர் ஊரார் முன்னிலையில் பரத், அவரின் உறவினர்கள் ராகேஷ், ராஜேஷ், மணி, தினேஷ், ஷைலீஸ் மற்றும் நர்ஷின் ஆகியோர் அப்பெண்ணை மிருகத்தனமாக தாக்கினார்கள்.

பின்னர் அவரின் தலைமுடியை மொட்டையடித்ததோடு, பரத் தனது மனைவியின் தோள் மீது ஏறி உட்கார்ந்தார்.

அப்போது ஏன் காதலனுடன் ஓடிபோனாய் என அவரிடம் கேட்டனர்.

அதற்கு அழுதுகொண்டே பேசிய பரத்தின் மனைவி, காதலனுடன் நான் ஓடி போனது உண்மை தான், ஆனால் அவன் என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டான் என கூறினார்.

இதையடுத்து தொடர்ந்து அப்பெண்ணை கொம்பால் அவர்கள் அடித்தனர்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட அது வைரலானது.

வீடியோவானது காவல் ஆணையர் பார்வைக்கு சென்ற நிலையில் உடனடியாக அந்த கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்

இதையடுத்து பெண்ணின் கணவர் பரத் உட்பட ஏழு பேரை பொலிசார் கைது செய்தனர்.
Previous Post Next Post