33 ஆண்டுகள் வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் பெண் எப்படி இருக்கிறார்? வைரலாகும் புகைப்படம்இந்தியாவில் 33 ஆண்டுகாலம் வெறும் டீ மட்டும் குடித்து இளம் பெண் ஒருவர் வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாவட்டர் பாராடியா கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லி தேவி. தற்போது 44 வயதாகும் இவர், 11 வயதிலிருந்தே வெறும் டீ மட்டுமே குடித்து வருகிறார்.

இது குறித்து பில்லி தேவியின் தந்தை ரதி ராம் கூறுகையில், என் மகள் 6-ம் வகுப்பு படிக்கும்போது உணவு அருந்துவதை நிறுத்திவிட்டாள்.

பாட்னா பள்ளி சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள சென்றார். அதிலிருந்து திரும்பிய பின்னர் அவர் உணவு அருந்துவதை, தண்ணீர் பருகுவதை நிறுத்திவிட்டாள்.

முதலில் பால கலந்து டீ, பிஸ்கட் மற்றும் பிரட் சாப்பிட்டு வந்தார். அதன் பின் பிளாக் டீக்கு மாறிவிட்டார்.
இதையும் அவள் ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் ஒரு குவளை அருந்துகிறாள் என்று கூறியுள்ளார்.

பில்லியில் சகோதரர் பிஹாரி லால் ராஜ்வாடே கூறுகையில், இவளின் இந்த பழக்கத்தால், அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுவிட்டோம்.

ஆனால், எந்த மருத்துவரும் அவரது வினோத பழக்கத்தின் பின் வேறு ஏதும் உடல் நலக் குறைபாடு இருப்பதாக உறுதி செய்ய முடியவில்லை என்று கூறிவிட்டனர்.

இது மட்டுமல்ல பில்லி எப்போதாவதுதான் வீட்டை விட்டு வெளியே வருவார். மற்ற நேரங்களில் அவர் சிவனை வணங்கிக் கொண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிடுவார் என்று சற்று வேதனையுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோரியா மாவட்ட மருத்துவமனை மருத்துவர் எஸ்.கே.குப்தா கூறுகையில், இது சற்று ஆச்சரியமாகவே உள்ளது. ஒரு நபரால் 33 ஆண்டுகள் வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ முடியும் என்பதை நம்ப முடியவில்லை, அதுவும் முடியாது.

நவராத்திரியின் போது 9 நாட்கள் சிலர் டீ மட்டுமே அருந்தி விரதம் மேற்கொள்வார். ஆனால், 33 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.
Previous Post Next Post