நிர்வாண போட்டோவை வெளியிட்ட பிரபல ஹாலிவுட் நடிகை.. விளாசிய நெட்டிசன்கள்..!



ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன் ஆடையில்லாமல் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதை பார்த்து சிலர் அவரை விளாசியுள்ளனர்.

ஹாலிவுட் நடிகை லின்ட்சே லோஹன் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் அவர் ஆடையின்றி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஹை ஹீல்ஸை தவிர அவர் எதுவும் அணியாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

லோஹன்
கடந்த 2016ம் ஆண்டில் இருந்து இஸ்லாத்தை பின்பற்றி வரும் லோஹன் இப்படி ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்டதை பார்த்து சிலர் அவரை விளாசியுள்ளனர். அவர் இஸ்லாத்தை அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

குர்ஆன்
லின்ட்சே கடந்த ஆண்டு நியூயார்க் நகரில் கையில் குர்ஆனுடன் நடந்து சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியானது. மேலும் ஃபேஷன் ஷோவுக்கு அவர் முக்காடு போட்டு வந்திருந்தார். இருப்பினும் தான் இஸ்லாத்திற்கு மாறியதாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.


Previous Post Next Post