அண்ணன் மனைவியிடம் அத்துமீறிய தம்பி.... சொல்லிப்பார்த்தும் கேட்காததால் போட்டுத்தள்ளிட்டேன்: அதிர்ச்சி வாக்குமூலம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவியிடம் எல்லை மீறிய தம்பியை கொலை செய்த அண்ணனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாதையனுக்கு திருமணமாகியுள்ள நிலையில், இவர்களுடன் திருமணமாகாத தம்பி நாகராஜ் வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று, திடீரென்று மாதையன் தனது தம்பியை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நாகராஜ், நிகழ்விடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து சடலத்தை இழுத்து வந்து வீட்டிற்கு முன்பு போட்டுவிட்டு, மாதையன் சூளகிரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

தம்பியை கொலை செய்த மாதையன் அளித்த வாக்குமூலத்தில், 'என் மனைவியிடம் நாகராஜ் அடிக்கடி தகராறு செய்து வந்தான். என் மனைவியின் கையைப் பிடித்து இழுப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தான்.

இவ்வாறு செய்யக்கூடாது என பலமுறை அவனைக் கண்டித்தும் திருந்தவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் தம்பியை குத்திக் கொன்றுவிட்டேன்,'' என்று கூறியுள்ளார்.

மாதையன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post