
பிரபல பாலிவுட் நடிகையும், கவர்ச்சி கன்னியுமான சரீன் கான் சமீபத்தில் அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது அவரை பார்ப்பதற்கு ரசிகர்களின் கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்தை தாண்டி சரின் கான் சென்ற போது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் தகாத முறையில் தொட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கூட்ட நெரிசல் என்று கூட பார்க்காமல், அவர் பல முறை அடித்தார்.
அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கூட்ட நெரிசல் தப்பித்து சென்றால் போதும் என்று பார்க்காமல், தப்பு செய்த நபரை அந்த இடத்திலே அடித்த சரீன்கானுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.