
இந்தியாவில் கணவரை பிரிந்து வாழும் பெண் மகளை பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிட்சரை சேர்ந்த பெண்ணுக்கு திருமணமாகி நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து அப்பெண் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இதையடுத்து அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதோடு தனது 15 வயது மகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் அவர் தள்ளியுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரூ. 6000-ஐ வாங்கி கொண்டு இளைஞர் ஒருவருடன் தனது மகளை அப்பெண் அனுப்பியுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து அழுது கொண்டே காவல் நிலையத்துக்கு சென்ற சிறுமி தனது தாய் குறித்தும் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்தும் புகார் அளித்தார்.
இதையடுத்து பொலிசார் சிறுமியின் தாய் உட்பட மூவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.