நாளை மறுநாள் தூக்கு! திடீரென்று மரணதண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்ட நபர்: எப்படி தெரியுமா?
பாகிஸ்தானில் நாளை மறுநாள் தூக்கிலிடப்பட்ட வேண்டிய நபரின் மரணதண்டனையை சுப்ரீம் கோர்ட் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது.

பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவர் கிசார் ஹயாத். காவலராக பணியாற்றி வந்த இவர் தன்னுடன் பணியாற்றிய சக காவலரை துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் கிசா ஹயாத் உடனடியாக கைது செய்யப்பட்டார். அதன் பின் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த வேளையில், கடந்த 2001-ஆம் ஆண்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.


சிறையில் இருந்த கிசார் ஹயாத் தீவிரமான மனநோயாளியாக மாறியதால், அவருக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கிசார் ஹயாத்தின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.

15.01.2019 அன்று இவருக்கு தூக்கிலடப்படும் நாள் என்று குறிப்பிட்டிருந்த நிலையில்,

மனநிலை சரியில்லாதவரை தூக்கிலிட்டு கொல்வதற்கு சர்வதேச சட்டங்கள் இடமளிக்காததால் இந்த தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என பல்வேறு தர்ப்பினரிடம் இருந்தும் பிறநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வர்களிடமிருந்தும் கோரிக்கை எழுந்தது.

இவற்றை எல்லாம் பரீசிலித்த சுப்ரீம் கோர்ட் கிசார் ஹயாத்துக்கு நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
Previous Post Next Post