உயர் அதிகாரிகளுடன் மனைவி கள்ளத்தொடர்பு.. தாலியை கையில் வைத்துகொண்டு கதறும் பொலிஸ் அதிகாரி..!



விழுப்புரம் மாவட்டம் ஆயுதப் படையில் பணிபுரியும் காவலர் ஒருவர் ஆயுதப்படை அதிகாரிகள் சிலர் தன்னுடைய மனைவியுடன் தகாத உறவு வைத்து தன்னுடைய குடும்பத்தை சீரழித்து விட்டதாக கூறும் வீடியோ பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜா. இவரது மனைவி சவிதா. இவரும் அதே பகுதியில் ஆயுதப்படை பெண் காவலராக உள்ளார்.

மனைவி தகாத உறவு
இந்நிலையில் பதவியை பயன்படுத்தி தனது மனைவி சவிதாவுடன் அதிகாரிகள் தகாத உறவில் ஈடுபட்டதாக ராஜ் குற்றம்சாட்டுகிறார். முன்னாள் ஆயுதப்படை ஆய்வாளர் செல்வராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் நெடுஞ்செழியன், மேலும் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் மேற்கண்ட நபர்களால் என்னுடைய வாழ்க்கையும் தன் குழந்தையின் வாழ்க்கையும் சீரழித்துவிட்டனர் என மனைவியின் தாலியை கையில் வைத்து கொண்டு ராஜா வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக காவலர் ராஜா கடலூர் மாவட்டத்துக்கும் இவரது மனைவி சவிதா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் மாற்றப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Previous Post Next Post