
தமிழத்தில் அரசு மருத்துவமனையில், ரத்த பரிசோதனை மையத்தில், பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லேப் டெக்னீசியன் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு இளம் பெண்ணொருவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார்.
குழந்தைக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவர் அறிவுறுத்தலின்பேரில் ரத்த பரிசோதனை மையத்துக்கு ரத்தம் கொடுக்கச் சென்றார்.
அப்போது ரத்த பரிசோதனை மையத்தில் லேப் டெக்னீசியனாக இருந்த யோகநாத் என்பவர் அப்பெண்ணின் அழகில் மயங்கினார்.
இதையடுத்து பெண்ணின் கணவரிடம், குழந்தைக்கு ரத்தம் எடுக்க வேண்டும் எனக் கூறி வெளியில் அனுப்பினார்.
கணவர் சென்றுவிட்ட நிலையில், குழந்தைக்கு பரிசோதனை செய்த யோகநாத், குழந்தையின் தாயாரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பெண் அலறிக் கொண்டு வெளியே ஓடிவந்ததை பார்த்த பொதுமக்கள், தகவலறிந்து யோகநாத்தை பிடித்து அடித்து உதைத்தனர்.
பின்னர் அங்கு வந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சத்யா, யோகநாத்தை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
யோகநாத், ஏற்கெனவே பலமுறை பெண்களிடம் தவறாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் புகாரின்பேரில் மருத்துவமனைக்கு வந்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.