ஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வினோதம்.. எங்கு தெரியுமா?



உலகில் ஒவ்வொரு கலாச்சார பழக்கவழக்கங்களும் சில முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும்.

அந்த வகையில் தன்சானியா பழங்குடியினரின் பழக்கவழக்கம் மிகவும் வினோதமாக உள்ளது.

வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

அந்த பங்குடியின் மக்களின் உள்ளூர் பாரம்பரியத்தின் படி, பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முன், குழந்தைக்காக ஒரு ஆணை திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்வார்களாம்.

அதுவும் அந்த பெண்களே தனக்கான ஆணை தேர்வு செய்து, குழந்தை பெற்றுக் கொண்ட பின் பெண்கள் மற்ற பெண்ணை திருமணம் செய்து, அந்த இரு பெண்களும் சேர்ந்து அந்த குழந்தையை வளர்ப்பார்களாம்.

அதன் பின் அந்த ஆண்களும் தந்தைக்கான உரிமையை எடுத்துக் கொள்ளாமல் அவர்களிடமே விட்டு சென்று விடுவார்களாம்.

திருமண தம்பதிகளாக கருதப்படும், அந்த இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட மாட்டார்களாம்.

இப்படி ஒரு பழக்கம் ஏன்?
குழந்தை இல்லாத பெண்கள், தன் சொத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பெண்கள் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் இந்த வினோதமான பழக்கத்தை, தன்சானியா பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
Previous Post Next Post