தேனிலவு சென்ற இடத்தில் புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்!




எகிப்து நாட்டில் தேனிலவை கொண்டாடிய பிரித்தானிய பெண், கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டினா கல்பெடியானு என்கிற 24 வயது இளம்பெண் கடந்த ஆண்டு மே மாதம் லிவியு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

எகிப்து நாட்டில் தங்களுடைய தேனிலவை கொண்டாட விரும்பிய தம்பதியினர், தாமஸ் குக் மூலம் முன்பதிவு செய்த பின்னர் ஜூலை மாதம் ஐந்து நட்சத்திர விடுதியான பரோன் அரண்மனை சாஹி ஹஷேஷிற்குள் நுழைந்தனர்.

அங்கு சென்ற சில நாட்களிலே உடல்நிலை சரியில்லாமல் கிறிஸ்டினா கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்.

6 மாதம் தேனிலவை முடித்துவிட்டு இங்கிலாந்திற்கு திரும்பிய போது, கிறிஸ்டினா கடும் வயிற்றுவலி மற்றும் மூட்டு பிடிப்பால் துடித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சுகாதாரமற்ற உணவை எடுத்துக்கொண்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் அவர் கீல்வாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ள கிறிஸ்டினா, அனைவருக்கும் தேனிலவு செல்லும்போது பல கனவுடன் செல்வார்கள். நாங்களும் அப்படி தான் சென்றோம். ஆனால் சென்ற சில நாட்களிலே பெரும் துயரத்திற்கு ஆளாகிவிட்டோம்.

என்னால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். நான் என் கணவருக்கு பாரமாகிவிட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக லிவியு கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக ஜான் கூப்பர் (69) மற்றும் சூசன் (63) என்கிற தம்பதியினர் ஆன்லைனில் பதிவு செய்த தாமஸ் குக் உணவை சாப்பிட்டதால் அறையில் பரிதமாக இறந்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Previous Post Next Post