பள்ளி விடுதியில் திடீரென குழந்தை பெற்றெடுத்த மாணவி
ஒடிசா மாநிலத்தில் 14 வயது பள்ளி மாணவி விடுதியில் திடீரென குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில், கந்தமால் மாவட்டத்தில் தரிங்கேரி பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி, பழங்குடி மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு 8ம் வகுப்பு பயின்று வரும் 14 வயது மாணவி சனிக்கிழமை இரவு திடீரென குழந்தை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த குழந்தையையும், சிறுமியை விடுதியில் இருந்து வெளியேற்றி காட்டுப்பகுதிக்கு ஊழியர்கள் துரத்தி விட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து சென்ற கந்தமால் மாவட்ட நல அலுவலர் (DWO) சருலதா மல்லிக், தீவிர விசாரணை மேற்கொண்டு விடுதியில் பணிபுரியும் ஆறு ஊழியர்களை இடைநீக்கம் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

மாநில அமைச்சர் ரமேஷ் மஜ்ஜி சம்பவம் குறித்து போனில் கேட்டுக்கொண்டதோடு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சீனியர் மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post