
அன்றாடம் சீரியல்களை மக்கள் பார்ப்பதினால் அதில் நடிக்கும் பிரபலங்களை தங்கள் வீட்டு பிள்ளை போலவே மக்கள் நினைக்கிறார்கள்.
இதனாலேயே அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துப் போகிறார்கள்.
அப்படி ஒரு சீரியல் நடிகரின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
ஹிந்தியில் பல சீரியல்கள் நடித்து பிரபலமானவர் ராகுல் தீக்ஷித். 28 வயதான இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று (30 ஜனவரி) தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவரின் மரணம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.
ராகுல் இறப்பதற்கு முந்தைய நாள் நண்பர்களுடன் ஒரு பார்ட்டில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.