கூரையின் மீதிருந்து பதிவு செய்யப்பட்ட குளியல் காட்சிகள்.!


இலங்கை நாட்டில் இருக்கும் கொழும்பு நகரில் இருக்கும் ஜா-எல பகுதியில் தொழிற்சாலைகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் அவர்களின் குடும்பத்துடனும்., வெளியூரில் இருந்து வந்து இருக்கும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அந்த பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் வாலிபர்., அங்குள்ள பெண்கள் குளியலறையில் குளிப்பதை மேலே இருந்தபடி வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளார்.

மேலும்., பகலில் வீடியோ காட்சிகள் பதிவு செய்யும் பட்சத்தில் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில்., இரவு நேரங்களில் வீட்டில் மேல் இருந்து அந்தந்த வீட்டின் கூரைகளில் ஏறி வீடியோ காட்சிகளாக பதிவு செய்யும் வழக்கத்தை வைத்துள்ளார்.

சம்பவத்தன்று வீட்டின் குளியல் அறையில் பெண் ஒருவர் குளித்து கொண்டு இருக்கும் போது., வழக்கம் போல யாருக்கும் தெரியாமல் வீடியோ காட்சிகளை பதிவு செய்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சார்ந்த மக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து துவைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை புடைத்தெடுத்த மக்கள் பின்னர் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post