அயர்லாந்தில் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆலன் ஹவீ (40) என்பவர் தனது மனைவி கிளோடக் மற்றும் லியம், நியல், ரயன் ஆகிய மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை படுகொலை செய்த ஆலன் பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆசிரியராக பணியாற்றிய ஆலன் இறப்பதற்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தில், என்னிடம் எப்போதும் ஏதோ தவறு உள்ளது, என் உறவினர்கள் மீதியை கண்டுப்பிடித்து கொள்ளட்டும்.
நானும் என் மனைவி கிளோடிக்கும் இதிலிருந்து எப்போதும் மீண்டு வரபோவதில்லை என எழுதப்பட்டிருந்தது.
ஆனால் ஆலன் எதற்காக குடும்பத்தாரை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மையை இன்று வரை பொலிசாரால் கண்டுப்பிடிக்க்க முடியவில்லை.
ஆனால் ஆலன் மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக முன்னரே கூறப்பட்டது.

இதனிடையில் ஆலன் ஆபாச திரைப்படங்களுக்கு அடிமையானவர் என தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், தன்னுடைய எதிர் பாலினத்தவர் அணியும் உடைகளை தானும் அணியும் விசித்திர பழக்கம் கொண்டவராகவும் ஆலன் இருந்துள்ளார்.
அதாவது தனது மனைவி கிளோடக்கின் உள்ளாடைகள் உள்ளிட்ட அவரின் உடைகளை அணியவும் செய்துள்ளார்.
இப்படி ஒரு விதமான கருப்பு பக்கங்களை ஆலன் கொண்ட நிலையில் ஆபாச படங்களை பார்க்கும் போது தனது குடும்பத்தாரிடம் சிக்கியுள்ளார்.
இது குறித்து பேசிய ஆலன் மனைவியின் தாய் மேரி மற்றும் சகோதரி ஜாக்குலின், முழு விசாரணைக்கு பின்னரும் இந்த கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை.

ஆனால் எங்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் வரை ஆலன் மிகவும் நேர்மையான வாழ்க்கையை வாழ்பவர், நல்ல மனிதர் என்றே நினைத்திருந்தோம்.
ஆனால் அவருக்கு இப்படி ஒரு கருப்பு பக்கம் இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை என கூறியுள்ளனர்.