3 நாட்களில் திருமணம்! மணப்பெண்ணின் பின்னணி குறித்து வெளியான உண்மையால் அதிர்ச்சியில் உறைந்த மணமகன்

இந்தியாவில் 3 நாட்களில் திருமணம் செய்து கொள்ளவிருந்த புதுப்பெண் ஒரு கொலை குற்றவாளி என்பதை அறிந்த மணமகன் மற்றும் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் பர்ஜங் மாவட்டத்தை சேர்ந்தவர் சமீர் சிங். இவர் மகள் மான்சி.

மான்சிக்கும், இளைஞர் ஒருவருக்கும் மார்ச் 13ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது.இந்நிலையில் நேற்று முன் தினம் மான்சி இருக்கும் இடத்துக்கு வந்த பொலிசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த மான்சியின் வருங்கால கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்துக்கு சென்றனர்.

அப்போது பொலிசார் அவர்களிடம் கூறுகையில், கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி பிரசாந்த் என்ற இளைஞருடன் மான்சி மற்றும் அவருக்கு தெரிந்த 5 பேருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து 6 பேரும் சேர்ந்து பிரசாந்தை கொலை செய்தனர். இது தொடர்பாக நான்கு பேரை ஏற்கனவே கைது செய்துவிட்டோம்.

ஆனால் மான்சியும், இன்னொரு பெண்ணும் மட்டும் தலைமறைவாக வேறு ஊரில் இருந்தனர்.

தற்போது மான்சி இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்ததால் அவரை கைது செய்துள்ளோம் என கூறினார்கள்.

இதை கேட்டு மான்சியின் வருங்கால கணவர் மிரண்டு போனார், ஆனாலும் திருமணத்துக்கு முன்னரே மான்சி ஒரு கொலை குற்றவாளி என தெரிந்ததால் தங்கள் மகன் வாழ்க்கை தப்பித்தது என மணமகனின் பெற்றோர் பெருமூச்சு விட்டனர்.
Previous Post Next Post