தாயார் காதலனுடன் உல்லாசம்... காருக்குள் சிக்கிய 3 வயது சிறுமி மரணம்: பகீர் சம்பவம்

அமெரிக்காவில் காதலனுடன் உல்லாசத்திற்கு தடையாக இருப்பதாக கூறி காருக்குள் பூட்டிவிட்டு சென்ற 3 வயது சிறுமி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தாம் குற்றமிழைத்ததாக குறித்த சிறுமியின் தாயாரும் முன்னாள் பொலிஸ் அதிகாரியுமான அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது.

பொலிஸ் ரோந்து வாகனத்தில் தமது 3 வயது மகளை இருத்திய பின்னர், சக பொலிஸ் அதிகாரியுடன் பாலியல் உறவில் ஏற்பட்டிருந்த 29 வயதான காசி பார்க்கர்,

ஒருகட்டத்தில் தமது மகள் காரில் இருப்பதை மறந்து போயுள்ளார். இதனிடையே குளிர்சாதன வசதி செயல்படாததால் சிறுமியின் உடல் உஷ்ணம் 107 டிகிரி என அதிகரித்து, இதனால் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.சம்பவத்தன்று மகளை காருக்குள் இருக்க சொல்லிவிட்டு சக பொலிஸ் அதிகாரியின் குடியிருப்புக்கு சென்றுள்ளார் காசி.

ஆனால் மகள் காரில் இருப்பதை மறந்த காசி, அங்கேயே தூங்கியுள்ளார். சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின்னர் அவர் திரும்பி வந்துள்ளார்.

இதனிடையே சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் காசி மற்றும் அவரது சக அதிகாரி லாட்னர் ஆகிய இருவரையும் பொலிஸ் துறையில் இருந்து நீக்கியுள்ளனர்.

ஆனால் சிறுமி காரில் தனியாக இருப்பது தமக்கு தெரியாது என மொழி அளித்த லாட்னர் மீது வழக்குப் பதியாமல் விடுவித்துள்ளனர்.
Previous Post Next Post