துரோகம் செய்துவிட்டாள்...3 மாதத்தில் கசந்த திருமண வாழ்க்கை: குத்திகொலை செய்த கணவன்

சென்னையில் திருமணம் முடிந்த 3 மாதத்திலே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த காதல் மனைவியை கணவன் குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த அருள் குமார் (24) மற்றும் சந்தியா (20) ஆகியோர் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளனர்.

அருள்குமாருக்கு மனைவின் வீட்டு பக்கத்தில் எலக்ட்ரீசியன் வேலை கிடைத்ததால், திருமணம் முடிந்த பின்னர் தன்னுடைய மனைவியுடன் மாமனார் வீட்டிலேயே தங்க ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையில் சந்தியாவுக்கு அருகே உள்ள பேன்சி ஸ்டோர் உரிமையாளுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உள்ளே புகுந்த சந்தியாவின் தாய் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு திரும்பியுள்ளார்.

ஆனால் அதற்கும் மீண்டும் வாக்குவாதம் முற்றி அருகில் இருந்த கத்தியை எடுத்து அருள்குமார், சந்தியாவை கழுத்தில் குத்தியுள்ளார். அதனை தடுக்க முயன்றபோது சந்தியாவின் தாய்க்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அருள்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post