மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவிக்கு சிறையில் தொடர்ந்து பாலியல் தொல்லை தரப்படுவதாக அவர் வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஏன் இன்னும் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என நீதிபதிகள் இன்று கேள்வி எழுப்பினர்.
ஜாமீனில் விடுவதில் அரசுக்கு என்ன அச்சம் என்றும் நிர்மலா தேவி என்ன சூப்பர் குற்றவாளியா? என்றும் வினவியுள்ளனர்.
இதனிடையில், நிர்மலாதேவிக்கு சிறையில் தொடர்ந்து பாலியல் தொல்லை இருப்பதாக அவர் வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தப்பி ஓட முயற்சித்ததாக கூறி கொன்று விடுவோம் என பொலிஸ் மிரட்டுவதாகவும் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.