ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை..என்ன காரணம்? விசாரணையில் வெளியான தகவல்

தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

சேலம் அருகேயுள்ள பூலாவரி கிராமம் ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். தனியார் பேருந்து ஓட்டுனரான இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ரம்யலோட்சனி என்ற மகளும், 12-ஆம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

ரம்யலோட்சனி திருச்சங்கோட்டில் இருக்கும் விவேகானந்தா கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு மகனை தனது தாயின் வீட்டிற்கு ராஜ்குமார் அனுப்பியுள்ளார். அதன் பின் மறுநாள் காலை வீட்டிற்கு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு கதவை தொடர்ந்து தட்டியுள்ளான்.ஆனால் கதவு திறக்காததால், வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது, தாய், தந்தை, சகோதரி மூவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார்.

அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், விரைந்து வந்த பொலிசார் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ரம்யலோட்சனியின் காதல் விவகாரமே இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாற்று சமூக இளைஞனை ரம்யா காதலித்து வந்ததாகவும், இதற்கு பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்றிரவு பேசி சமாதானம் செய்யும் முயற்சியின்போது சண்டை ஏற்பட்டு மகளை கொலை செய்துவிட்டு, பெற்றோரும் தூக்கில் தொங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
Previous Post Next Post