திருமணமாகாமலேயே கர்ப்பம்... யூ-டியூப் வீடியோ பார்த்து குழந்தை பெற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்

இந்தியாவில் திருமணமாகாத பெண் கர்ப்பமான நிலையில் யூ-டியூப் வீடியோவை பார்த்து அவரே குழந்தை பெற்றதையடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பாஹ்ரை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர் வாடகை வீட்டில் தனியாக தங்கி அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேறு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடிபெயர்ந்தார்.



இதனிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண்ணின் அறைக்கு வெளியே ரத்தம் வந்ததை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது குழந்தை பெற்ற நிலையில் அந்தப் பெண் இறந்து கிடந்தார். அவர் அருகில் கிடந்த செல்போனை பார்த்த போது அதில் யூடியூப் வீடியோவில் குழந்தை பெறுவது தொடர்பான வீடியோ ஓடி முடிந்த நிலையில் இருந்தது.





இதையடுத்து அவர் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பொலிசார் கூறுகையில், இறந்த பெண்ணின் பெயர் சுமதி ஆகும், ஓன்லைன் வீடியோவை பார்த்து தனியாகக் குழந்தை பெற்றுகொள்ள அவர் முயற்சி செய்துள்ளார்.

இதனால் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது செல்போனை வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.
Previous Post Next Post