மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிறைக்கு சென்ற பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி.
அங்குள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாணவிகளை அவர் பாலியல் தொழிலுக்கு ஆசை வார்த்தை கூறி அழைக்கும் ஆடியோ அப்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிறைக்கு சென்ற பின்னர் நிர்மலாதேவிக்கு தொடர்ந்து ஜாமீன் வழங்கப்படாமல் இருந்தது.
அவருக்கு சிறையில் பாலியல் துன்புறுத்தல் தரப்படுவதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மதுரை கிளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து நிர்மலாதேவி ஊடகங்களுக்கு பேட்டியளிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் விதமாக ஊடகங்களுக்கு பேட்டி ஏதும் கொடுக்கக்கூடாது. விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனைகளூடன் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கியுள்ளனர் நீதிபதிகள்.