இளம் நடிகைகள் இருவரின் மோசமான செயற்பாடு! காதலர்களால் ஏற்பட்ட விபரீதம்

கண்டியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட இளம் நடிகைகள் இருவருக்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு நடிகைகளும் போதைப்பொருளுடன் உடுநுவர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை கம்பளை நீதிமன்றில ஆஜர்படுத்திய வேளையில், பத்தாயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஒருவருட ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது



நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் இளம் சிங்கள நடிகைகள் இருவருக்கே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த இரண்டு நடிகைகள் மற்றும் மேலும் சிலரும் தங்கள் பணிக்காக இடம் ஒன்றை தேடிச் சென்றுள்ளனர். இதன் போது பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை போது இருவரிடமும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இள வயதுடைய இந்த நடிகைகள் தங்களின் காதலர்களினால் போதைப்பொருளுக்கு அடிமையானதாக தெரிவித்துள்ளார்.

குறித்த இரு நடிகைகளும் கடந்த 6 மாதங்களாக ஹெரோயின் போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணியின் நிமித்தம் வெளியில் செல்லும் நாட்களில் கொழும்பில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு செல்வதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post