இரத்தம் கொதிக்கிறது! பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும்... ஆவேசப்பட்ட நடிகை குஷ்பு

பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்து தனது ரத்தம் கொதிப்பதாக நடிகை குஷ்பு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல்.

அந்த கும்பலில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள் நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு, பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும். இந்த கொடூரத்தை செய்த யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது.ரத்தம் கொதிக்கிறது, அந்த மிருகங்களுக்கு கருணையே காட்டக் கூடாது.

அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

குஷ்புவை போன்று திரையுலகை சேர்ந்த பல கலைஞர்கள் இந்த சம்பவம் குறித்து கொதித்து போய் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Previous Post Next Post