
கொழும்பு சங்கரிலா உணவகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சமப்வத்தில் பிரபல சமையல் கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் தனது உறவினர்களுடன் குறித்த உணவகத்தில் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பில் அமைந்துள்ள பிரபல உணவகங்களில் இடம்பெற்ற வெடிப்பு சமப்வங்களில் 9 வௌிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் 13 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.