வெளிநாட்டில் இருந்து ஆசையாக வந்த அப்பா: அண்ணன் கண்முன்னே தங்கைக்கு நடந்த சோகம்

சேலம் மாவட்டத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சையது ரஃபிக் ஜக்ரியா என்பர் சவுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஊரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதற்காக சந்தோஷமாக வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்துள்ளார் சையது.

இதற்கிடையில் இவரின் இளைய மகள் ஆயிஷா சுஹைனா, வழக்கம் போல தனது சகோதரருடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளி நுழைவு வாயிலில் இருந்து மாணவி ஆயிஷா வகுப்பறை மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பள்ளியின் பேருந்து பின் நோக்கி வந்து ஆயிஷாவின் மீது மோதியது.இதில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கிக்கொண்ட சிறுமி சுஹைனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தனது அண்ணன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஓட்டுநரிடமும் பள்ளி நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post