யாழிலும் குண்டுவெடிப்பு! தேவாலயத்தில் பதற்றம்??

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள மரியன்னை தேவாலயத்திற்கு அண்மையாக உள்ள கிணற்றில் வெடிப்பு சத்தமொன்று கேட்டது.இதையடுத்து பூசை சிறிதுநேரம் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் அசம்பாவிதங்கள் ஏதுமில்லையென்றதும்,பூசை இடம்பெற்றது.

தற்போது அந்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விரைந்து மேலதிக விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, வடக்கிலுள்ள முக்கிய தேவலாயங்களில் பொலிசார், அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post