மீண்டும் அமுலுக்கு வருகிறது ஊரடங்கு உத்தரவு!

இலங்கை முழுவதும் இன்றைய தினமும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதன்படி இன்று இரவு ஒன்பது மணியிலிருந்து நாளை அதிகாலை நான்கு மணிவரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென்று அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு எட்டு மணிக்கு அமுல்படுத்தபட்ட ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post