கணவனின் நண்பரை வீட்டில் வைத்து கொலை செய்த இளம்பெண்!

பெங்களூரில் பாலியல் தொல்லை கொடுத்த கணவரின் நண்பரை இளம்பெண் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த மோகன் (30) என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ரம்யா (24) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். அதேபோல, மோகனின் தூரத்து உறவினரும், நண்பருமான டிரைவர் மது (24) என்பவரும் நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன் வீட்டில் மது இறந்த நிலையில் கிடப்பதாக அவருடைய சகோதரன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தப்பியோட முயற்சித்த மோகன் மற்றும் ரம்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மோகனின் நண்பன் என்கிற முறையில் ரம்யாவிடம் சாதாரணமாக பேசி வந்துள்ளார். நாளடைவில் மதுவின் பேச்சு மாறிப்போய், ஆபாசமாக படுக்கைக்கு அழைத்துள்ளார்.

இதனை மோகனுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என நினைத்த ரம்யா, மதுவுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஆனால் மது, ரம்யாவின் சகோதரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு மீண்டும் வற்புறுத்த ஆரம்பித்துள்ளார்.

இதில் மனமுடைந்த ரம்யா வெள்ளிக்கிழமையன்று தன்னுடைய கணவரிடம் நடந்தவை குறித்து கூறியுள்ளார். உடனே மோகனும், மதுவை வீட்டிற்கு அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த மது, அங்கு நின்று கொண்டிருந்த ரம்யாவின் சகோதரியை தாக்கியதோடு, மோகன் சட்டையை பிடித்தும் இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரம்யா, அங்கிருந்த இரும்புக்கம்பி ஒன்றை வைத்து, மதுவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பின்னர் மோகனும் அந்த இரும்புக்கம்பியை வாங்கி தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் மயங்கி விழுந்த மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
Previous Post Next Post