அரை நிர்வாணமாக கிடந்த எனது தங்கையை பார்த்து அதிர்ச்சியடைந்தோம்: பொள்ளாச்சி மாணவியின் அண்ணன் பரபரப்பு பேட்டி

பொள்ளாச்சியில் தனது உறவினரால் கொலை செய்யப்பட்ட மாணவி பிரகதியின் அண்ணன் அரவிந்த், குற்றவாளிக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என கூறியள்ளார்.

அவர் கூறியதாவது, நானும் எனது தந்தையும் விவசாயம் செய்து வருகறோம். எனது தந்தை நன்றாக படிப்பதால் அவளை சிரமப்பட்டு படிக்க வைத்தோம்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வர பஸ் ஏற நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.3.30 மணிக்கு பிரகதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுதுரை தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்லடம் வந்து கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர் அவளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில், எனது தங்கை மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அரைநிர்வாணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.

கோவை, பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வருவது அதிக கவலை அளிக்கிறது.

குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என கூறியுள்ளார்.
Previous Post Next Post