இலங்கையின் தற்கொலை தாக்குதல் தொடர்பில் ஐ.எஸ் அமைப்பின் அதிரடி அறிவிப்புஇலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலை பொறுப்பேற்பதாக ஐஸ் பயங்கரவாத அமைப்பு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகைப்படங்கயும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்தவர்கள் ஐ.எஸ் அமைப்பின் போர் வீரர்கள் என அமாக் தெரிவித்துள்ளது

அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரஜைகளையும் இலக்கு வைத்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்புடைய இணையத்தளம் ஒன்றின் முதல் பக்கத்தில் 3 தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படம் மற்றும் ஐஎஸ் கொடி பதிவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Abul Barra, Abul Mukhtar மற்றும் Abu Ubaida என்ற மூவரே இந்த படத்தில் தோன்றிய மூவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளியாகிய புகைப்படங்களுக்கு அமைய தற்கொலை குண்டுத்தாக்குதல்தாரியான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் ஸஹாரன் ஹசின் இந்த புகைப்படங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Previous Post Next Post