
மலையாள சினிமாவில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி. தமிழில் இவர் அஜித்துடன் தீனா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவர் இந்த தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நிறைய இடங்கள் பிரச்சாரம் செய்தார். அப்போது காரில் இருந்துகொண்டு கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் வயற்றில் கை வைத்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக சுரேஷ் கோபி இதுபோல் செய்ய கூடாது யாரென்று தெரியாத பெண் வயிற்றில் எப்படி கை வைக்கலாம் என்கின்றனர்.
அவருக்கு ஆதரவாக சிலர் ஒரு அண்ணனாக அந்த பெண்ணையும் குழந்தையும் ஆசீர்வதித்துள்ளார் இதில் என்ன தவறு உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.