அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அவசரமாக மூடப்படுகின்றன!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் எதிரொலியாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் மறு அறிவித்தல்வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை அறிவித்தலினை உயர் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இதன்படி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேறிவருவதாக அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்துள்ளதுடன் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post Next Post