கருக்கலைப்பிற்காக சென்ற கர்ப்பிணிக்கு நடந்த சோகம்!

பொள்ளாச்சியில் கருக்கலைப்பிற்கு சென்ற கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, தலைமறைவாகியுள்ள மருத்துவருக்கு பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் என்பவரது மனைவி வனிதா மணி(37). இவர்களுக்கு 4 மகன்கள் ஒரு பெண் உட்பட 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த வனிதா, கருக்கலைப்பு செய்ய முடிவு செய்துள்ளார். உடனே சித்த மருத்துவர் முத்துலெட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

முத்துலெட்சுமியும் தன்னுடைய மகன் கார்த்திக்கை அழைத்துக்கொண்டு வனிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு வனிதாவுக்கு கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வனிதாவின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வனிதாவின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முத்துலெட்சுமியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Previous Post Next Post