குண்டு வெடிப்பிலிருந்து தப்பிப் பிழைத்த இலங்கைத் தமிழரின் முகநூல் பதிவு....

இன்று காலை உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாட்டுக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோயிலுக்குப் போக இருந்த இலங்கைத் தமிழர் கானா ப்ரபா சில நிமிடங்களுக்கு முன் எழுதியிருக்கும் முகநூல் பதிவு....
இன்று காலை உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாட்டுக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோயிலுக்குப் போக இருந்த இலங்கைத் தமிழர் கானா ப்ரபா சில நிமிடங்களுக்கு முன் எழுதியிருக்கும் முகநூல் பதிவு.... 
இன்று காலை உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாட்டுக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் கோயிலுக்குப் போக இருந்தேன்.
காலை நாலரை மணிக்கு யாழ்ப்பாண பஸ் கொழும்பை வந்தடைந்ததும் கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு இலக்கியாவையும், இலக்கியா அம்மாவையும் கூட்டிக் கொண்டு தேவாலயம் போக இருந்தேன். பயணக் களைப்பில் தூங்கி எழத் தாமதமாகி விட்டது.
மூவரும் நாம் தங்கியிருந்த ஹோட்டலில் காலை உணவைச் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று நினைத்து உணவருந்தும் போது கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு என்ற செய்தி கிட்டியது. தொடர்ச்சியாக ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து உடனடியாக நாம் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேற முயன்றோம். மள மளவென்று பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடினோம்.
ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில் பொலிசார் வந்து குவிந்து விட்டனர். ஹோட்டல் முன்னால் இருந்த வாகனங்கள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. எமக்கு வழமையாக காரோட்டும் சிங்களச் சாரதி இதற்கிடையில் விடாமல் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தது தெரிந்தது.
ஹோட்டலின் பயணப் பொதிகள் தேங்கிய அறையில் வெடிகுண்டுச் சோதனை நடத்த ஆயத்தங்கள் நடக்கிறது.
ஹோட்டலிலிருந்து வெளியேறி அந்தச் சிங்களச் சாரதியின் காரில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது தான் சொன்னார்.
“இந்த ஹோட்டலுக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான ஒரு நபர் நீண்ட நேரம் நின்றிருந்ததால் இங்குள்ள அனைவரையும் வெளியேற்ற முயற்சி நடக்கிறது, அதனால் தான் பதட்டத்தில் உங்களை அழைத்து உங்கள் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க முயற்சித்தேன்” என்றார்.
அவருடைய துணையுடன் இப்போது மாமனார் வீடு வந்திருக்கிறோம். ஒரு பரபரப்பான சூழலில் வீதியெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கலவரம் தான் எல்லோர் முகத்திலும் இப்போது.
Previous Post Next Post