திருமண கனவில் இருந்த கல்லூரி மாணவியை கொலை செய்தது இவர் தானா? வெளியான புகைப்படம்

தமிழகத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளம் பெண் சம்பவத்தில் கொலையாளி அவரது அத்தை மகன் என்பது உறுதியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ராகவநாயக்கன் பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமியின் மகள் பிரகதி (20). இவர் கோயமுத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் ஒட்டன் சத்திரத்தைச் சேர்ந்த நாட்டுதுரை என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால், திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் 13-ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது.திருமண கனவில் இருந்த பிரகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவேயில்லை, இதனால் பெற்றோர் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.


அதன் பின் நேற்று பிரகதி மிகவும் மோசமான முறையில் கொலை செய்யப்பட்டு, பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் பூசாரிப்பட்டி சாலையோரம் முட்புதரில் அரைநிர்வாணமாக இறந்துகிடந்தார்.

இதையடுத்து சைபர் பிரிவு பொலிசார் பிரகதியின் செல்போன் பதிவுகளை ஆராய்ந்தபோது அதன் கால் டிராக்கும், பிரகதியின் உறவினர் சதீஷ் குமாரின் கால் டிராக்கும் ஒரே திசையில் பயணித்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சதீஷ் குமாரைப் பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர் பிரகதியை தாம் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.


சதீஷ் குமாரும் பிரகதியும் விரும்பியதாகவும், பிரகதியை தனது திருமணம் செய்து வைக்கச் சொல்லி அவர் கேட்ட போது, பெற்றோர் மறுத்ததால், ஆத்திரத்தில் இருந்துள்ளார்.இதன் காரணமாகவே கடந்த வெள்ளிக்கிழமை பிரகதியை நேரில் அழைத்துப் பேசியுள்ளார். அதன் பின்னர் பிரகதிக்கு என்ன நடந்தது, எங்கு வைத்து பிரகதியைக் கொன்றார், அவருக்குத் துணையாக இருந்தது யார், உடலை எப்படி கொண்டுவந்து போட்டார் என்பது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையாளி என்று கூறப்படும் சதீஷ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post