யாழிலுள்ள கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு

யாழ்ப்பாணம் பழைய தபால் வீதியில், வெளிமாவட்ட தனியார் பேருந்து நிலையம் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகள் தீ வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம்- ஸ்ரான்லி வீதி, பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளரின் தகரத்திலான கொட்டகை மற்றும் அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு குப்பை என்பவற்றுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டன.

குறித்த தீயினை யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர் 20 நிமிட போராடத்திற்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post