இளம் பெண்களை திருமணம் செய்து கழற்றி விடும் பலே காதலன்... மனைவி மூலம் தெரியவந்த அதிர்ச்சி உண்மை

தமிழகத்தில் இளம் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபர், அந்த பெண்ணை ஏமாற்றி வேறோரு பெண்ணை திருமணம் செய்யவுள்ளவுதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது உறவினரின் மகளான நாமக்கல் மாவட்டம் குமாரபளையத்தைச் சேர்ந்த இளவரசியை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திக், இளவரசியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இளவரசி இது குறித்து திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், கார்த்திக்கிற்கும், இளரவசிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் திகதி பொலிசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் கார்த்தியின் பெற்றோருக்கு, இளவரசியை மருமகளாக ஏற்க மறுத்ததோடு, சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி திருமணம் ஆன மறுநாளே வீட்டை விட்டு சென்ற கார்த்திக் தற்போது வரை வீடு திரும்பவில்லை என்றும் தனது பெரியம்மாள் மகளை தற்போது கார்த்திக் திருமணம் செய்திருப்பதாகவும் கூறி இளவரசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு இதுபோன்று அவர் இரண்டு பெண்களை ஏமாற்றியுள்ளார் என்றும், நான் மூன்றாவது பெண், தற்போது நான்காவது பெண்ணாக அவரை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்தியாளர்களிடம் இளவரசி கூறியுள்ளார்.
Previous Post Next Post