அனைத்து ரயில் சேவைகளும் இடை நிறுத்தப்படுகின்றன!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் எதிரொலியாக அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று காலையிலிருந்து இடம்பெற்றுவந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் பலர் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டுமுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து மார்க்கங்களும் தற்பொழுது தடைப்பட்டுள்ள நிலையில் ரயில்வே திணைக்களத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Previous Post Next Post