என்னிடம் சில்மிஷம் செய்தவன் யார்? கன்னத்தில் அறைந்த விவகாரம்: நடிகை குஷ்பு விளக்கம்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற நடிகை குஷ்பு, அங்கு தன்னிடம் சில்மிஷம் செய்ய முயன்ற இளைஞரின் கன்னத்தில் அறைந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.



பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஹொய்சாலா நகருக்கு நடிகை குஷ்பு சென்றிருந்தார்.

கூட்ட நெரிசலில் சிக்கியபடி குஷ்பு மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தனது பின்னால் வந்த நபரின் கன்னத்தில் குஷ்பு பளார் என அறைந்தார்.



தவறாக நடக்க முயற்சித்ததால், ஆத்திரமடைந்த குஷ்பு அவரை அறைந்தது பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் அந்த நபர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர் கிடையாது, அவன் ஒரு வழிப்போக்கன், தவறாக நடக்க முயன்றதால் கன்னத்தில் அறைந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.
Previous Post Next Post