வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவன்.... நள்ளிரவில் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் குடிபோதையில் மனைவியை அடித்து உதைத்து விட்டு தூங்கி கொண்டிருந்த கணவரை நள்ளிரவில் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (35). இவர் மனைவி கோமதி (30). தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்ததோடு, குடிக்கு அடிமையான குமார் தினமும் மது அருந்திவிட்டு கோமதியுடன் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று போதையில் வீட்டுக்கு வந்த குமார், கோமதி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்துள்ளார்.பின்னர் அவர் அயர்ந்து தூங்கியுள்ளார். கணவரின் செயலால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த கோமதி நள்ளிரவில் பாறாங்கல்லை எடுத்து வந்து குமார் தலையில் போட்டார்.

இதில் தலைநசுங்கி குமார் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கோமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post