மட்டக்களப்பில் உண்மையில் என்ன நடந்தது? மக்களுக்கு அழைப்பு

மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டு தாக்குதல் குறித்து வதந்திகளை நம்பாமல் உண்மையினை அறிந்து செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்களின் ஒன்றியம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிர் நீத்தவர்களுக்காக எதிர்வரும் 24ஆம் திகதி துக்க நாளாக அனுஸ்டிக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் பல்சமய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பல்சமயங்கள் ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயருமாறு பொன்னையா ஜோசப் தெரிவிக்கையில்,

தனிமனிதனோ, ஒரு குழுவோ செய்யும் வன்செயல்கள் ஒரு மதத்தினையோ இனத்தையோ சார்ந்தவை இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வதந்திகளை நம்பவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous Post Next Post