இலங்கையில் மேலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறக் கூடுமென கனேடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியுள்ள கனேடியர்கள் நடமாட்டத்தை குறைத்துக்கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தாக்குதல் சம்பவங்கள் மேலும் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் நாளைய தினம் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.