விடுதலைப்புலிகளுடனான மோதலின் போது கூட பொது மக்கள் இவ்வாறு இலக்கு வைக்கப்படவில்லை!


கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று 1மணியளவில் கூடியது.

இந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ,

விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டுகால போரில் கூட இவ்வாறு பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் இனியேனும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயற்படும் பட்சத்தில் முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதியும் பிரதமரும் முரணான திசையில் இருந்து கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.

அதேபோன்று தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகக்களை சாதாரண விடயமாகவும் கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post