கல்லூரியில் இருந்த இளம் ஆசிரியைக்கு நேர்ந்த விபரீதம்... அதிர்ச்சியில் உறைந்த சக ஆசிரியர்கள்

சேலத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற இளம் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த நித்யா, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற தேர்தல் பயிற்சியில் நித்யா கலந்து கொண்டார்.



அப்போது திடீரென மயக்கம் அடைந்த நித்யாவை சக ஆசிரியர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரியவந்த நிலையில் சக ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.

தேர்தல் பணி காரணமாக கடந்த சில நாட்களாக, நித்யா மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Previous Post Next Post