அட்சய திரிதியையான இன்று உப்பைத் தானம் செய்தால் என்ன நடக்கும்? இந்த ஒரு தானத்தால் 11 தலைமுறைக்கும் இது நடந்தே தீரும்!

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, "அக்ஷய திருதியை" எனப்படுகிறது. அக்ஷயம் என்றால் வளர்வது என்று பொருள்.
அக்ஷய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு.அதனால் அக்ஷய திருதியை அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.
வனவாச காலத்தில், சூரியப் பகவானை வேண்டி தர்மர் அக்ஷய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அக்ஷய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அக்ஷய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன.

அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.

இந்த நாளில் தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமி பூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும்.
குறைவில்லா அன்பு
அக்ஷய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால் அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது.
தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம்.
ஏழைகளுக்கு தயிர்சாதம் தானம் தருவதால் 11 தலைமுறைக்கும் குறைவில்லா அன்பை கிடைக்கச் செய்யும் வளமான வாழ்வு அமையும்.
உணவு தானம் நன்மை
வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியது அல்ல.
காரணம் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு லஷ்மி பூஜை செய்ய வேண்டும்.
செல்வ வளம் தரும்
அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.


தானம் செய்தால் புண்ணியம்
அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை.
பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும்.
கடன்கள் குறையும்
குடை தானம்
குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.
எண்ணெய் தானம்
எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.
பூ தானம்
பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும், சாந்தமாகவும் அமையும்.
Previous Post Next Post