
இங்கிலாந்தை சேர்ந்த வயதான நபர் தனக்கான சவப்பெட்டியை 18 மாதங்கள் செலவு செய்து தயாரித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிராங் பார்ட்லெட் என்கிற 76 வயதான நபர், தன்னுடைய குடும்பத்திற்கு அதிக செலவு வைக்க கூடாது என்பதற்காக தனக்கான சவப்பெட்டியை தானே தயாரித்துள்ளார்.
இதற்காக 18 மாதங்கள் செலவு செய்துள்ளார். ஆனால் அவருடைய வீட்டில் 20 அடி உயரத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் பல மாதங்கள் செலவு செய்து தயாரித்த சவப்பெட்டியும் பழுதடைந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய குடும்பத்தாருக்கு முடிந்த அளவிற்கு அதிக செலவு வைக்காமல் சிக்கனமாக என்னுடைய இறுதிசடங்கை முடிக்க நினைத்தேன். அது எனக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக நானே 18 மாதங்கள் செலவு செய்து சவப்பெட்டியை உருவாக்கினேன்.

அதன் வேலைப்பாடுகள் முழுவதுமாக முடிந்துவிடவில்லை. அதற்குள் தீ பிடித்து எரிந்து விட்டது. முடிந்த வரையில் விரைவாக மீண்டும் வேலையை ஆரம்பித்து சவப்பெட்டியை தயார் செய்ய முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார்.

