
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு குணம் உண்டு. அந்தவகையில் இங்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அசட்டை குணம் ( கவனக்குறைவு, பொறுப்பின்மை, பொறுப்பின்மை, அவசரபுத்தி) அதிகம் இருக்குமென்று பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதற்கு காரணம் அவர்களிடம் இருக்கும் அவசரம் மற்றும் பொறுமையின்மை குணங்களாகும்.
பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எந்த செயலையும் இவர்கள் செய்து விடுவார்கள். இவர்களின் ஆர்வமும், ஆற்றலும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவைதான்.
இவர்கள் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் பயப்பட மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையின் ஒரு நொடியை கூட வீணடிக்க மாட்டார்கள் ஆனால் உபயோகமாகவும் பயன்படுத்த மாட்டார்கள்.
மிதுனம்

இவர்களை பொறுத்த வரையில் வாழ்க்கை எப்பொழுதும் போரடித்து விடக்கூடாது. இவர்களின் இந்த குணமே இவர்களுக்கு வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும்.
சிலசமயங்களில் இவர்கள் மற்றவர்கள் என்ன கூறுவார்கள், என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி துளியும் கவலைப்படாமல் இவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்வார்கள். அசட்டை குணம் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
பொறுமையின்மையும், நிலையற்ற தன்மையும் தாங்கள் என்ன நினைக்கிறோமோ அதனை பேச இவர்களை தூண்டும், அதன் விளைவுகளை பற்றியோ, அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றியோ இவர்களுக்கு கவலை கிடையாது.
தனுசு

இவர்கள் அந்த நிமிடத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனாலேயே இவர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வது இவர்களின் சிறந்த குணமாகும்.
ஆனால் இவர்கள் எப்பொழுது என்ன செய்வார்கள் என்பதை உங்களால் யூகிக்க முடியாது ஏனெனில் அது இவர்களுக்கே தெரியாது.
இந்த உலகம் மிகவும் அழகானது அதேசமயம் மிகவும் ஆபத்தானதும் கூட. பொறுப்பின்றி வாழ்வது ஜாலியனதாக இருக்கலாம் ஆனால் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அதைவிட முக்கியமானது என்பதை மறந்து விடாதீர்கள்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரையில் பெரும்பாலும் அனைவரும் இவர்கள் புத்திசாலிகள் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் என்றும் நினைப்பார்கள் ஆனால் இவர்கள் எப்பொழுதும் அப்படி இருக்கமாட்டார்கள்.
தலைக்கனமும், பொறுமையின்மையும் இவர்களின் மோசமான குணமாகும். இவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால் அது உடனடியாக இவர்களுக்கு வேண்டும் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் இல்லாமல் இருப்பார்கள்.
எந்தவொரு செயலையும் கெடுப்பதெனில் அதனை முதலில் தொடங்குவது இவர்களாகத்தான் இருக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களின் அவர்களின் செயல்களும், பேச்சுக்களும் இவர்களுக்கே சிலசமயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இவர்கள் அனைத்து தருணங்களிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனாலேயே இவர்கள் அசட்டையாக இருப்பார்கள்.
இவர்கள் வேடிக்கையாக நினைத்து செய்யும் செயல்கள் மற்றவருடனான சண்டைக்கு வழிவகுக்கும். இவர்கள் தங்களின் உணர்ச்சிகளை ஒருபோதும் தனக்குள்ளேயே வைத்துக்கொள்ள மாட்டார்கள், அதனால் இவர்களின் பொறுப்பற்ற பேச்சு மற்றவர்களை எப்படி காயப்படுத்தும் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.
இவர்கள் எப்பொழுதும் நேர்மையாக இருப்பார்கள், ஆனால் அது எப்பொழுதும் இவர்களுக்கு நல்லதாக அமையாது.
விருச்சிகம்

சிம்ம ராசிக்காரர்களை போலவே விருச்சிக ராசிக்காரர்களும் ஒரே மாதிரியான குணத்தை கொண்டவர்கள். ஆனால் இவர்களிடம் இருக்கும் ஒரு அதிகமான பொறுப்பற்ற குணம் இவர்களின் பேச்சுக்கள் பற்றியதுதான்.
என்ன பேச வேண்டும் எங்கு பேச வேண்டும் என்பதை பற்றி இவர்களுக்கு அக்கறையோ, கவலையோ எதுவும் இருக்காது.
போகிறபோக்கில் நினைத்ததை பேசிவிடுவார்கள். அனைத்திற்கும் மேலாக இவர்கள் எளிதில் மற்றவர்களை மதிப்பீடு செய்து விடுவார்கள். அது தவறானதாகவே இருந்தாலும் அதனை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்.
இவர்களுடன் பழகுபவர்களுக்கு இவர்களின் இந்த குணங்களை பொறுத்து கொள்ளும் குணம் நிச்சயம் இருக்க வேண்டும் இல்லையெனில் பிரச்சினைதான்.