அஜித்தின் 61வது படத்தின் இயக்குனர் இவரா?- வைரலாக பரவும் செய்தி

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஸ்வாசம் படப்பிடிப்பில் எடுத்தது போல் இல்லாமல் இந்த பட படப்பிடிப்பில் அவ்வப்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் அஜித்.தல பிறந்தநாள் ஸ்பெஷலாக போஸ்டர், டீஸர் வருமா என ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் ஏமாற்றம் தான் கிடைத்தது. இப்போது அவரது 61வது படம் குறித்து ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.

அதாவது விக்ரம்-வேதா என்ற வெற்றி படத்தை கொடுத்த புஷ்கர்-காயத்ரி தான் அஜித்தின் 61வது படத்தை இயக்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கில பத்திரிக்கைகளிலும் அதிக செய்திகள் வருகின்றன.
Previous Post Next Post