உங்க வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா? அப்போ இந்த பழ வர்க்க அர்ச்சனை மட்டும் செய்திடுங்க

லட்சுமி தேவியின் அருள் இருந்தால் மட்டும் செல்வம் பெருகும் என்று நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு.நமது வீட்டில் லட்சுமி கடாஷம் அதிகரிக்க பழ வர்க்க அர்ச்சனை செய்தால் விரைவில் நல்ல பயன் வந்து சேரும் என்பது ஐதீமாகும்.

அந்தவகையில் மாதுளம் பழம் செல்வ மகளான லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது.அந்த மாதுளம் பழங்களை கொண்டு லட்சுமி தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபடும் ஒரு முறை தான் பழ வர்க்க அர்ச்சனை முறை.

தற்போது இதனை எப்படி செய்வது மற்றும் இந்த அர்ச்சனை செய்வதனால் என்ன பயன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

எவ்வாறு செய்வது?
திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமையில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு காலை 7 மணிக்குள்ளாக இந்த பழ வர்க்க அர்ச்சனை பூஜையை செய்து விட வேண்டும்.

சுத்தமான சில மாதுளம் பழங்களை எடுத்துக் கொண்டு அதை உரித்து, மாதுளை பழங்களின் மணிகளை ஒரு தூய்மையான பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு 27 அல்லது 108 சுத்தம் செய்யப்பட்ட சில்லரை நாணயங்களை அந்த மாதுளம் பழ மணிகள் இருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.


ஒரு தாம்பாளத் தட்டில் லட்சுமி தேவியின் சிறிய சிலை அல்லது படத்தை வைத்து, வாசமுள்ள மலர்கள் கொண்டு லட்சுமி தேவிக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.

பின்பு பூஜை அறையில் இருக்கும் சிறிய அளவிலான விநாயகர் சிலை அல்லது படத்திற்கு தீபமேற்றி, அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வணங்கிய பிறகு, பாத்திரத்தில் இருக்கும் ஒவ்வொரு சில்லரை நாணயங்களுடன் சிறிது மாதுளம் பழ மணிகளை சேர்த்து, லட்சுமி தேவியின் சிலை அல்லது படத்திற்கு சலட்சுமி மந்திரங்களை துதித்தவாறு அர்ச்சனை செய்ய வேண்டும்.லட்சுமி தேவிக்கு இந்த மாதுளம் பழ வர்க்க அர்ச்சனை செய்து முடித்த பிறகு, அந்த மாதுளம் பழங்களை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகளுக்கும் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பிரசாதமாக தர வேண்டும்.

நன்மைகள்
இந்தப் பழ வர்க்க அர்ச்சனை செய்து மகா லட்சுமியை வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

மேலும் உங்கள் செல்வ நிலை உயரும். குடும்பத்தில் பொருளாதார மேன்மை, மகிழ்ச்சி, மனநிறைவு ஏற்படும்.

இந்த பழ வர்க்க அர்ச்சனை வழிபாட்டை வாழ்நாள் முழுவதும் செய்து வருபவர்களுக்கு வறுமை நிலை என்றும் அணுகாது.
Previous Post Next Post